உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து

 கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து

கூடலுார்: கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து சுற்றுலா பயணிகள், நேற்று காலை ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள், மதியம் ஊட்டியிலிருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலுார் நோக்கி வந்தனர். மாலையில், மேல் கூடலுார் அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் மோதி விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்தது. அதில், காரில் பயணம் செய்த, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். கூடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று சென்றனர். கூடலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை