மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
5 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
5 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
5 hour(s) ago
கூடலுார்:கர்நாடகாவில் இருந்து, ஊட்டிக்கு, கர்நாடக அரசு பஸ்சில் கடத்தி வந்த புகையிலை பொருட்களை, கக்கனல்லா சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.தமிழக -கர்நாடக எல்லையான முதுமலை கக்கல்லா சோதனை சாவடியில், எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார், மைசூரில் இருந்து ஊட்டி செல்லும் கர்நாடக அரசு பஸ்சை நேற்று காலை சோதனை செய்தனர். சோதனையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, 15 பாக்கெட்கள் கொண்ட, 24 புகையிலை பண்டல்களை, ஊட்டிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை கொண்டத்தில் யாரும் உரிமை கூறவில்லை. இதன் மதிப்பு, 22 ஆயிரம் ரூபாய் ஆகும்.அரசு பஸ், புகையிலை பொருட்களை, மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, பஸ் டிரைவர் ரவிச்சந்திரன், 40, கைது செய்து, ஜாமினில் விடுவித்தார். தொடர்ந்து, பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்றது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago