உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடுவட்டத்தில் 11 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

நடுவட்டத்தில் 11 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

கூடலுார்; நடுவட்டத்தில், குற்றங்களை தடுப்பதற்காக போலீசார் சார்பில், 11 இடங்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமரா இயக்கத்தை, நீலகிரி எஸ்.பி., நிஷா ஆய்வு செய்தார். கூடலுார் நடுவட்டம் பகுதி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில், போலீசார், 11 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன் பதிவுகளை நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வரவேற்றார். எஸ்.பி. நிஷா தலைமை வகித்து, சி.சி.டி.வி., கேமரா செயல்பாடுகளை இயக்கி வைத்து ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், 'பொதுமக்ளை பாதுகாக்கவும் குற்றங்களை தடுக்கும் வகையில், போலீஸ் துறை சார்பில், 11 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. நீலகிரியில், மாநில எல்லைகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், சி.சி.டி.வி., கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். தேவையுள்ள இடங்களில் ஆய்வு செய்து, சி.சி.டி.வி., கேமராக்கள்பொருத்தப்படும்,' என்றார். நிகழ்ச்சியில், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், நடுவட்டம் எஸ்.ஐ.,கள்பவுலோஸ், குமரன், தனிப்பிரிவு போலீசார் இசக்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !