மேலும் செய்திகள்
துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
21-Sep-2025
குன்னுார்; மத்திய அரசின் ஒரு மாத கால தொழில் முனைவோர் சான்றிதழ் பயிற்சிக்கு, மகளிர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய, திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், குன்னூர் மேரிஸ் பள்ளி அருகே உள்ள பயிற்சி மையத்தில், ஆயில், சோப், பெனாயில் மற்றும் மூலிகை சோப் உட்பட 'டோய்லெட்ரி' பொருட்கள் தயாரித்தல், ஒரு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், ''இந்த பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, 99761 80670 எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி, பெயர்களை முன்பதிவு செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விரைவில் பயிற்சி துவங்கப்படும்,'' என்றார்.
21-Sep-2025