உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாலையில் கனமழை காலநிலையில் மாற்றம்

மாலையில் கனமழை காலநிலையில் மாற்றம்

குன்னுார்: குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை திடீரென கனமழை கொட்ட் தீர்த்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் பெய்த இந்த திடீர் மழையால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழையில் நனையாமல் இருக்க பலரும் ஆங்காங்கே உள்ள கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் ஒதுங்கி நின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் இருளும் சூழ்ந்ததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை