உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டாவது நாளாக பள்ளி செல்லாத குழந்தைகள்

இரண்டாவது நாளாக பள்ளி செல்லாத குழந்தைகள்

பந்தலுார்:பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் வடமாநில தொழிலாளியின், 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. அந்த சிறுத்தை பிடிபட்ட நிலையில், மேலும் ஒரு சிறுத்தை அதே பகுதியில் நடமாடியுள்ளது. இதனால், 8 ம் தேதி குழந்தைகள் பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு செல்லவில்லை. வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சிறுத்தை அச்சம் மக்களிடம் அகலவில்லை. அதனால், நேற்றும் பள்ளிக்கு மாணவர்கள் செல்லவில்லை.தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, கவுன்சிலர் ஜாபீர், பி.டி.ஏ. நிர்வாகிகள் சவுகத், பாவா, அபுபக்கர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், 'சிறுத்தை அச்சம் தீரும் வரை, காலை, மாலையில், மாணவர்களை வனத்துறை வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்; பள்ளிக்கு வரும் நடைபாதையை சாலையாக மாற்றவும், புதர்களை அகற்றவும் எஸ்டேட் நிர்வாகத்தை அணுகி தீர்வு காண வேண்டும்,' என, தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை