முத்துமாரியம்மன் கோவிலில் குழந்தைகளின் பரதநாட்டியம்
குன்னுார் ; பழைய அருவங்காடு, முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் குழந்தைகளின் பரதநாட்டியம், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.குன்னுார் பழைய அருவங்காடு முத்து மாரியம்மன் கோவிலில், 51வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூ குண்டம் திருவிழா துவங்கியது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், விநாயகர், அம்மன் அபிஷேகம் கம்பன் சாட்டுதல் கரக உற்சவம், நவகிரக பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, கஞ்சிவர்த்தல் நடந்தது.விழாவில், அருவங்காடு நாட்டிய நடன பள்ளி குழந்தைகளின் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.