உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  களிமண் பொம்மை தயாரிப்பு அரசு :பள்ளி மாணவர்கள் சாதனை

 களிமண் பொம்மை தயாரிப்பு அரசு :பள்ளி மாணவர்கள் சாதனை

கோத்தகிரி: கோத்தகிரி கெங்கரை அரசு பள்ளி மாணவர்கள், களிமண் பொம்மைகள் தயாரிப்பில் சாதித்துள்ளனர். மாநில அரசு பள்ளி கல்வித்துறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நான்கு பிரிவுகளில் ஆண்டுதோறும் கலை திருவிழா போட்டிகள் நடத்துகிறது. பள்ளிகள், குறுவள மையம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டியில், கோத்தகிரி கெங்கரை பள்ளி பங்கேற்றுள்ளது. அதில், முதல் வகுப்பு மாணவன் முத்தரசன், 5ம் வகுப்பு மாணவன் வெற்றிவேல் ஆகிய மாணவர்கள், களிமண் பொம்மைகள் செய்தல் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடத்தை வென்றுள்ளனர். இதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் இருவரும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள் என்பதால், மாணவர்கள் வசிக்கும் தாளமுக்கை மற்றும் வாகப்பனை கிராம மக்கள் மகிழ்ச்சி அைடந்துள்ளனர். அவர்களுக்கு, ஊர் தலைவர்கள் பாலன், போஜன், தலைமை ஆசிரியர் லட்சுமணன், ஆசிரியர் ஆனந்தன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பவித்ரா மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்