குன்னுாரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க துாய்மை பணி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு
குன்னுார், ; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் துாய்மை பணி நடந்தது.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப, பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தினத்திற்காக, பல்வேறு துாய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, 'நீர்நிலைகளை அகலப்படுத்தி பாதுகாப்பது; பிளாஸ்டிக் இல்லாத விழிப்புணர்வு ஏற்படுத்துவது மரங்கள் நடவு செய்தல்,'என, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜூன், 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இந்நிலையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாகிப் லோட்டே உத்தரவின்பேரில், துாய்மை பணிகள் நடந்தது.கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் முன்னிலையில் வாரிய சுகாதார கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, பூரணிமேற்பார்வையில், துாய்மை பணியாளர்கள், ஊழியர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல, குன்னுாரில் வருவாய்துறையினர், போலீசார், கிளீன் குன்னுார் அமைப்பினர் உட்பட பலரும் ஒருங்கிணைந்து துாய்மை பணி மேற்கொண்டனர்.