உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துாய்மையே சேவை திட்டம் கன்டோன்மென்டில் துவக்கம்

துாய்மையே சேவை திட்டம் கன்டோன்மென்டில் துவக்கம்

குன்னுார்; 'துாய்மையே சேவை' என்ற கருப்பொருளை கொண்டு, வரும் அக், 2ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை பொது இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், இத்திட்டம் துவங்கியது. முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாகிப் லோட்டே உத்தரவின் பேரில், மலையப்பன் காட்டேஜ் பகுதியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை வாரிய முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார் துவக்கி வைத்தார். சின்ன வண்டிசோலை பள்ளி வரை நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கன்டோன்மென்ட் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சுகாதார கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, பூரணி, ராணுவத்தினர், அதிகாரிகள், கன்டோன்மென்ட் பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். கன்டோன்மென்ட் கிராமப்புற பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை மாணவ, மாணவியர் அகற்றி, அங்கு வசிக்கும் கிராம மக்களிடையே துாய்மையின் முக்கித்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெற்றோர், ராணுவத்தினர், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை