மேலும் செய்திகள்
கையெழுத்து இயக்கம்
21-Sep-2024
கூடலுார் : கூடலுார் நகராட்சி சார்பில் நடந்த துாய்மை சேவை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், திரளானோர் பங்கேற்றனர்.கூடலுார் நகராட்சி சார்பில், துாய்மை சேவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலம் மற்றும் மினி மராத்தான் போட்டி நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகம் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி வரையில் விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டிகள் துவங்கியது. கூடலுார் நகராட்சி தலைவர் பரிமளா, கமிஷனர் முனியப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில், ஜமால், இஷாதின், இர்பான்கான்; பெண்கள் பிரிவில் சுபலட்சுமி, தியான், யுவஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.இரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, முறையே, 7000 ரூபாய், 5000, 3000 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூடலுார் நகராட்சி மற்றும் ரோட்டரி வேலி நிர்வாகிகள் செய்தனர்.
21-Sep-2024