உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலநிலை மாற்றம் கோத்தகிரியில் கருத்தரங்கு

காலநிலை மாற்றம் கோத்தகிரியில் கருத்தரங்கு

கோத்தகிரி; கோத்தகிரி ராம்சந்த் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முகமது சுபீர் தலைமை வகித்தார். அதில், பசுமை நீலகிரி-2024-ஒரு லட்சம் மரம் கன்றுகள் நடும் திட்ட இயக்குனர் ஆசிரியர் ராஜூ, பேசியதாவது:உலகில் உள்ள அனைத்து மதங்களும், இயற்கையை கடவுளின் வடிவமாக காண்கின்றன. உலகில், நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் மற்றும் வளங்கள் மனித குலத்திற்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை.பசித்தோர்க்கு உணவு கொடுத்தல், அனைத்து உயிரினங்களையும் நேசித்தல் போன்ற முகமது நபியின் போதனைகள், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது.இறை உணர்வுடன், இயற்கை உணர்வு சேர்ந்தால், இந்த பூமி ஒரு சொர்க பூமியாக மாறும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இயற்கை வளங்களை பாதுகாப்பதும், பசுமை வளத்தை அதிகரிப்பதும் நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளிவாசல் நிர்வாகிகள் அலி, மொய்தீன் குட்டி மற்றும் மொய்து ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்த பேசினர். தொழுகைக்கு வந்திருந்த அனைவருக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக, பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ