மேலும் செய்திகள்
'கொடை'யில் திடீரென உருவான பனிமூட்டம்
08-Jan-2025
குன்னுார் : குன்னுாரில் மேக மூட்டத்துடன் மழை நீடித்த நிலையில், கடுங்குளிர் வாட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை கடும் மேகமூட்டம் நிலவியது. தொடர்ந்து, சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடுங்குளிர் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலவிய மேகமூட்டத்தால், வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி, மிகக் குறைந்த வேகத்தில் இயங்கின. பொதுவாக ஆண்டுதோறும் ஜன., மாதம் பனியின் தாக்கம் அதிகம் நிலவும் நிலையில், நடப்பாண்டு அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
08-Jan-2025