உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்க்கிங் கட்டண வசூல்; எச்சரித்த போலீசார்

பார்க்கிங் கட்டண வசூல்; எச்சரித்த போலீசார்

ஊட்டி ; ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கேசினோ சந்திப்பு வரை கட்டண அடிப்படையில், நகராட்சி சார்பில் குறிப்பிட்ட வாகனங்களை இடையூறின்றி நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, டெண்டர் விடப்பட்டு தனியார் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கி முன் வங்கி வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த ஏற்படுத்திய பார்க்கிங் பகுதியில் இருந்த வாகனங்களுக்கும், நேற்று தனியார் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிலர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ பகுதிக்கு வந்த போக்குவரத்து எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசார் கட்டணம் வசூலித்த நபரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை