உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடு

குன்னுார்: குன்னுார் டி.டி.கே, சாலையில் திறந்தவெளியில் கழிப்பிட கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குன்னுார் டி.டி.கே, சாலையில் தினமும் நுாற்றுகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு திறந்தவெளியில் ஓடும் கழிப்பிட கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவ, -மாணவிகளும் பொதுமக்களும் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை