மேலும் செய்திகள்
ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு
26-Sep-2025
பந்தலுார்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்வதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக, பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பந்தலுார் அருகே மாங்கோடு பகுதியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. அதில் பழங்குடியின மக்கள் ஆதார் அட்டை புதுப்பித்தல், புதிய ஆதார் பதிவு செய்தல் விபரங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு விண்ணப்பித்தனர். அதில், இ-சேவை மையத் தில், 60 ரூபாய் கட்டணமாக பெறப்படும் நிலையில், முகாமில், 120 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக பெறப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள், ஆதார் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாமல் திரும்பி சென்றனர். பழங்குடியினர் கூறுகை யில், 'முகாமில் கட்டணங்களை உயர்த்தியதால் பாதிக்கப்பட்டுள்ளோம். கிராம மக்கள் பயன்பெற வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்படும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இது போன்ற கட்டண உயர்வால் எங்களுக்கு எந்த பலனும் கிடையாது,' என்றனர். தாசில்தார் சிராஜூநிஷா கூறுகையில், ''தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் கட்டணம் குறை வாக வசூலிக்கப்படும். ஆனால் ஆதார் சேவை மையங்களில் புதிய கட்டணம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த முறைகேடும் கிடையாது,''என்றார்.
26-Sep-2025