உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மஞ்சூர் பஜாரில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்

மஞ்சூர் பஜாரில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்

மஞ்சூர்; மஞ்சூர் பஜாரில் சாலையில் நிறுத்தும் வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மஞ்சூர் பஜார் பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கீழ் குந்தா செல்லும் பஸ்கள் உட்பட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கிறது.அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே, போலீசார் ஆய்வு மேற்கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி