உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சுவர் விளம்பரங்களால் குன்னூர் நகரம் அலங்கோலம்

 சுவர் விளம்பரங்களால் குன்னூர் நகரம் அலங்கோலம்

குன்னூர்: குன்னூரில், அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் , சுவர் விளம்பரங்கள் அலங்கோலமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குன்னூர், ஊட்டி சுற்றுலா மையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் நகரில் அலங்கோலமாக காட்சியளிக்கும் விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களால் அதிருப்தியடைகின்றனர். குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களிலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களும் வரையப்பட்டுள்ளது. 1.19 கோடி ரூபாய் மதிப்பில் குன்னூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டில், பணிகள் மேற்கொண்ட சுவர்களிலும் கட்சியினரின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. குன்னூர் நகரின் அழகிய ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தி இருந்த இடங்கள், அரசியல் கட்சியினரின் போஸ்டர் ஒட்டவும், சுவர் விளம்பரம் செய்யும் இடமாக மாற்றியது. இவற்றை அகற்றவும். பழையது போல, ஓவியம் வரைவதாக நகர் மன்ற கூட்டத்தில் பேசிய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அழகு உணர்வுக்குழு நகரை பொலிவாக வைக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டங்கள் கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இவற்றின் செயல்பாடுகள் தற்போது இல்லாததால் மோசமான நிலையில் காணப்படுகிறது. தன்னார்வலர் விஜயகுமார் கூறுகையில், நகரை அழகாக வைக்க முன்னுதாரணமாக வைக்க வேண்டிய ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி