உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் விவகாரம்; ஜகோர்ட் நியமித்த ஆணையத்தின் வக்கீல் ஆய்வு

குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் விவகாரம்; ஜகோர்ட் நியமித்த ஆணையத்தின் வக்கீல் ஆய்வு

குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்டும் விவகாரம் தொடர்பாக, ஐகோர்ட் நியமித்த ஆணையத்தின் வக்கீல் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பில், பார்க்கிங் வசதியுடன் புதிய கட்டடங்கள் கட்ட நகராட்சி சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கடைகளை காலி செய்ய, 324 கடைகளுக்கு முதற்கட்டமாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அப்போது, எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்தப்பட்டது. சில வியாபாரிகள், உயர் நீதிமன்றத்தை அணுகி, அவகாசம் கேட்டு வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், ஜகோர்ட் நியமித்துள்ள ஆணையத்தின் வக்கீல் கிரி பாபு நேற்று, மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தற்காலிக கடைகள் அமைத்த இடங்களை, கமிஷனர் இளம்பரிதி மற்றும் நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகளுடன் ஆய்வு செய்தார். மார்க்கெட் கடைகளை அவர் பார்வையிட வந்த போது வியாபாரிகள் கூறுகையில், 'குன்னுாரில் தற்போதும் பாதிப்பு ஏற்படாமல் சிறப்பாக இருக்கும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய பழைய கட்டடங்களை பாதுகாக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்ட கடைகளை மீண்டும் வியாபாரிகள் கட்டி முடிக்க, நகராட்சி அனுமதித்தது; எஸ்டேட் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். வேறு பகுதிக்கு மாற்றினால் அனைவரும் பாதிக்கப்படுவர்,' என்றனர். வரும். 12ல் நடக்கும் மறு விசாரணையின் போது, இங்கு ஆய்வு செய்யப்பட்ட விபரங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை