மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
20 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
20 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
21 hour(s) ago
கூடலுார்:கேரளாவின் ஒரு சில பகுதிகளில், கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகத்திலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக, சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நீலகிரியில் 5 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, கூடலுார் அருகே உள்ள, தமிழகம் - கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், சோலாடி.பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட சோதனை சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் பயணியருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை, 'தெர்மல் ஸ்கேனர்' கருவி வாயிலாக செய்யப்படுகிறது.அதில், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகம் இருந்தால் அவர்கள் அருகே, உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.அங்கு அவர்களுக்கு, சிகிச்சையுடன், கொரோனா தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
20 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago