மேலும் செய்திகள்
நம் இளைஞர்களில் ஒருவர்கூட இனி ஏமாறக்கூடாது!
02-Apr-2025
பந்தலுார்,; பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு பின்னர், கிரிக்கெட் லீக் போட்டி நடத்தப்பட்டது. 'ஸ்டார் பாய்ஸ் மேங்கோரேஞ்ச் கிளப்' சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், 8- அணி, வீரர்கள் பங்கேற்று விளையாடினர். அதில், அணிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்டும் வகையில், போட்டியில் சிறப்பாக விளையாடினர்.அதில், பந்தலுார் 'பிளாக் காப்ஸ்' அணி முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் பண முடிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஸ்டார் பாய்ஸ் மேங்கோரேஞ்ச் குழுவினர் செய்திருந்தனர்.கிளப் நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வந்த நிலையில், சமீப காலமாக போதை பொருட்களுக்கு அடிமையாகி விளையாட்டின் மீதான ஆர்வத்தை குறைத்து வருகின்றனர். இதனை மாற்றும் வகையில், கிரிக்கெட் போட்டி நடத்தி இளைஞர்கள் மத்தியில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதற்கான முயற்சி மேற்கொண்டு உள்ளோம்,' என்றனர்.
02-Apr-2025