மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
ஊட்டி : ஊட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார், 'வீல் லாக்' போட்டு வருகின்றனர்.ஊட்டி நகர முக்கிய சாலைகளில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்துவரும் நெரிசலை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சவாலாக உள்ளது. நெரிசலை தவிர்க்க, நகரின் பெரும்பாலான சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளன.இருப்பினும், 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடருகிறது. போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குப்படுத்தினாலும், சிலர் விதிமீறி வருகின்றனர்.குறிப்பாக, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் கிளினிக்குள் நிறைந்த அப்பர் பஜார் பகுதி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டநேரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனை தவிர்க்க, போக்குவரத்து போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 'வீல் லாக்' போட்டு, அபராதம் விதித்து வருகின்றனர்.
18 hour(s) ago