உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்மா உணவக பாதையில் கழிவு நீர் ஓடுவதால் பாதிப்பு

அம்மா உணவக பாதையில் கழிவு நீர் ஓடுவதால் பாதிப்பு

பந்தலுார்:பந்தலுார் அம்மா உணவக பாதையில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பந்தலுார் பஜார் அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி அலுவலகம் செல்லும் சாலையை ஒட்டி அம்மா உணவகம் அமைந்துள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் உணவகத்தை ஒட்டிய நடைபாதையில் வழிந்தோடுகிறது.இதனால், உணவகத்திற்கு நடந்து செல்லும் மக்கள் மற்றும் அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக, அம்மா உணவகத்திலிருந்து கழிவறை செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் பாதை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.மக்கள் கூறுகையில்,'' இப்பகுதியில் பல நாட்களாக கழிவுநீர் ஓடியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி