உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்

 சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்

கூடலுார்: கூடலுார் நகராட்சி பகுதிக்கு, ஹெலன், இரும்புபாலம், தொரப்பபள்ளி உள்ளிட்ட குடிநீர் திட்டங்களின் கீழ், கிணறுகளில் இருந்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். பருவமழை காலங்களில் குடிநீருக்கு பிரச்னை இல்லை என்றாலும், கோடைகாலத்தில் பல பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேதமடையும் குடிநீர் குழாய்களை நிரந்தரமாக சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால், ஊழியர்கள் சைக்கிள் ரப்பர் பயன்படுத்தி தற்காலிகமாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை மீண்டும் சேதமடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், குடிநீர் ஆதாரங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் கோடையில், முறையாக தண்ணீர் வினியோகம் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில், கோடையில் தடையின்றி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய தேவையான குடிநீர் உள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை