உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சட்டபூர்வ கூலி உயர்வு ஒப்பந்த நடைமுறை விசைத்தறி சங்கத்தினர் கோரிக்கை கண்காணிக்க விசைத்தறி சங்கத்தினர் கோரிக்கை

சட்டபூர்வ கூலி உயர்வு ஒப்பந்த நடைமுறை விசைத்தறி சங்கத்தினர் கோரிக்கை கண்காணிக்க விசைத்தறி சங்கத்தினர் கோரிக்கை

சூலூர்;சட்டபூர்வமான கூலி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி, அதை கண்காணிக்க வேண்டும், என, கோவை, திருப்பூர்மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க்த்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் நேற்று முன்தினம் கோவை வந்தன. அவர்களிடம் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், கோபாலகிருஷ்ணன், பூபதி, கதிர்வேல் சாமி, கண்ணம்பாளையம் வேலுசாமி, கதிர்வேல் ஆகியோர் அளித்த மனு விபரம்: கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.90 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப எங்களுக்கு கூலி உயர்வு கடந்த, 10 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளோம். அதனால், மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நல கமிஷனர்கள், துணி நூல் துறை இயக்குனர்கள் எங்களது கோரிக்கையை பரிசீலித்து, கூலி உயர்வு ஒப்பந்தத்தை சட்டபூர்வமானதாக நடைமுறைப்படுத்தி, கூலி முறையாக வழங்கப்படுகிறதா என, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்திய அளவில், 40 சதவீத கிரே காடா உற்பத்தி இரு மாவட்டங்களில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு, 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டும், 50 கோடி ருபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. ஆனால், உரிய கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்குவது இல்லை. அதனால், தரமான துணியை உற்பத்தி செய்ய, சாதா விசைத்தறிகள் நவீனப்படுத்தி, சொந்தமாக நூல் கொள்முதல் செய்து, துணி உற்பத்தி செய்தாலும், இடைத்தரகர்கள் இல்லாமல் துணிகளை விற்க முடியாத நிலை உள்ளது. அதனால், சோமனூர் கிளஸ்டர் பகுதியில், மத்திய அரசு மானியத்துடன் ஜவுளி சந்தையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், நாங்கள் வாங்கும் கூலியில், மூன்றில் ஒரு பங்கை மின் கட்டணத்துக்காக செலவழிக்க வேண்டி உள்ளது. 3 ஏ 2 டேரிப்புக்கான சலுகைகளை தொடர்ந்து வழங்கிடவும், சூரிய மின் சக்தியில் விசைத்தறிகளை இயக்கிட உரிய சலுகைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை