உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடலுார், ; கூடலுாரில் ஆளும் கூட்டணிகள் ஒருங்கிணைந்த மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கூடலுார் புதிய பஸ் நிலையம் சார்பில், தி.மு.க.,வை தவிர்த்து, ஆளும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசு அதிகாரிகள்,வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.காங்., நிர்வாகி அம்சா தலைமை வகித்தார். அதில், 'மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அரசு துறை அதிகாரிகளை கண்டித்தும், மனித - வனவிலங்கு மோதலை தடுக்க தவறிய வன அதிகாரிகளை கண்டித்தும்,' கோஷங்கள் எழுப்பினர். கூடலுார் நகராட்சி கவுன்சிலர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை