மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
06-Dec-2024
கூடலுார் கூடலுார் ஸ்ரீ தர்ம சாஸ்தாகோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கூடலுார், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் திருவிழா, 20ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, கணபதி பூஜை, பிரசாத சுத்தி, அஸ்திர கலச பூஜை, வாஸ்து கலச பூஜை, பிரசாத பூஜை, வாஸ்து கலசாபிஷேகம், அத்தாழ பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணிக்கு கணபதி ஹோமம், உஷா பூஜை, பிரம்ம கலச பூஜை, பரிகலச பூஜை, பஞ்சகவ்ய கலச பூஜை, உச்ச பூஜை, மஞ்சகவ்ய கலராபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அதிவாச ஹோமம், கலசாதி வாசம், அதிவாச பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு கணபதி ஹோமம், கலசத்தி பூஜைகள் நடந்தது. காலை, 8:30 மணிக்கு உச்ச பூஜை, பரிகலசாபிஷேகம், பிரம்ம கலசாபிஷேகமும், தொடர்ந்து காலை, 9:50 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
06-Dec-2024