| ADDED : பிப் 07, 2024 10:44 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புஞ்சை கொல்லி பகுதி அமைந்துள்ளது.இதன் வழியாக காரைக்கொல்லி, கையுன்னி, சப்பந்தோடு, சேரம்பாடி, காவயல், அத்திச்சால் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சீரமைத்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பழுதடைந்து குழியாக மாறி உள்ளது. வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுவதுடன், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் மக்கள் நடந்து வர இயலாது.இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு அழைத்து வரும்போது, சாலையின் நிலையை காரணம் காட்டி வர மறுக்கின்றனர். இப்பகுதி மக்கள் சாலை பழுதடைந்ததால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர வேண்டியது அவசியம் ஆகும்.