ஊட்டி : ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், பட்டப் படிப்புகளுக்கு கடைசி கலந்தாய்வு, நாளை நடக்கிறது. கல்லூரி முதல்வர் (பொ) சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ., பி.எஸ். சி., பி.காம்., பி.காம்., சி.ஏ., பட்டப் படிப்புகளுக்கான கடைசி கலந்தாய்வு, வரும் 16ம் தேதி காலை 9.30 மணியளவில், கல்லூரி கலையரங்கத்தில் நடக்கிறது. தகுதி அடிப்படையில் வாய்ப்பிருப்பின் சேர்க்கை வழங்கப்படும். எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து கல்லூரியில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள், கலந்தாய்வுக்கு வரலாம். சேர்க்கைக்கு வரும் போது மதிப்பெண் பட்டியல் மூலச்சான்று, மாற்றுச் சான்றிதழ், சாதி சான்று, நடத்தை சான்று ஆகியவை அசல் மற்றும் தேவையான நகல்கள், சேர்க்கை கட்டணம் 2,000 ரூபாய் ஆகியவற்றுடன், பெற்றோர், பாதுகாவலருடன் பங்கேற்க வேண்டும். தமிழ் 6, ஆங்கிலம் 3, வணிகவியல், வணிகவியல் சி.ஏ., 14/8, கணிதம் 14, பாதுகாப்பியல் 25, பொருளியல் 41, வரலாறு, சுற்றுலாவியல் 36/27, தாவரவியல் 6, வேதியியல் 13, விலங்கியல் 16, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, விலங்கியல் 11, இயற்பியல் 16 என, 200க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு, சதாசிவம் கூறியுள்ளார்.