உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்த்தீனிய செடிகளை அகற்றும் ஆதிவாசிகள்

பார்த்தீனிய செடிகளை அகற்றும் ஆதிவாசிகள்

கூடலூர் : முதுமலை வனப்பகுதியை சூழ்ந்திருக்கும் உன்னி மற்றும் பார்த்தீனிய செடிகளை அகற்றும் பணியில் ஆதிவாசி மக்கள் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, கரடி, சிறுத்தை, மான், காடெருமை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் எண்ணற்ற பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. 321 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப் பகுதியில் உன்னி மற்றும் பார்த்தீனிய செடிகள் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், வனவிலங்குகளுக்கான புற்கள் போன்ற உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. உன்னிச்செடிகள் பூ பூத்து விதையாக மாறும் முன் அழித்தால் மட்டுமே அவை மீண்டும் வளர்வதை தடுக்க முடியும். அதனை ஏற்று, கடந்த சில ஆண்டுகளாக உன்னி செடிகளை பூ பூக்கும் பருவத்திலேய வெட்டி அழிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான உன்னி செடி அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளில் சுமார் 200 ஆதிவாசி பெண்கள், ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காப்பக இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, உதவி இயக்குனர் அமீர் ஹாஜா ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை