மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
ஊட்டி : நீலகிரியில் 10, பிளஸ் 2 பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியர் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ஊட்டி உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 36 மாணவ, மாணவியருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் இடம் பெற்ற ரகு, கவுசிக், முகம்மது நியாஸ், பிரீத்தி, மல்லிகா, ரசிதாபேகம் ஆகியோருக்கு 3 ஆயிரம் ரூபாய், 2ம் இடம் பிடித்த நவீன், முகில்வானன், முஜமில், கஸ்தூரி, தேன், ஷெர்வின் ஹூபா ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த கவுதம், ஹேமராஜன், தர்வீஷ்,திவ்யா, அபிநயா,நஜ்ரத் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பில் முதல் இடம் பெற்ற சத்தியநாராயணன், பாலகிருஷ்ணன், அகஷ்டின், கோமதி, கீர்த்தனா, ரின்சி ஆகியோருக்கு ஆயிரத்து 500 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற கார்த்திக், சச்சின், தாம்சன் இவாண்டர் பிளான்,வினிதா, சூர்யா, சல்மா ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற விக்னேஷ், விமல், முகம்மது இலியாஸ், ஹேமலதா, காயத்திரி, ராபியா ஆகியோருக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் இனியன், கண்காணிப்பாளர் ராஜகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
18 hour(s) ago