உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சட்ட உதவி மையம் திறப்பு

சட்ட உதவி மையம் திறப்பு

ஊட்டி : இந்தியன் வங்கிக்கான மக்கள் நீதிமன்றம் குன்னூர் மற்றும் கூடலூரில் நடக்கிறது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குன்னூர் மற்றும் கூடலூரில் இந்தியன் வங்கி சம்பந்தமான வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. அங்கு சட்ட உதவி மையமும் திறக்கப்படுகிறது. குன்னூரில் இன்று நீதி துறை நடுவர் மன்றத்தில் காலை 10.30 மணிக்கும், கூடலூர் முன்சிப் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நாளை காலை 11 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எல்பி தர்மாராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்ட உதவி மையங்களை திறந்து வைக்கிறார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி பிரேம்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி நாராயணசாமி கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ