உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆசிரியர் கூட்டணி கூட்டம்

ஆசிரியர் கூட்டணி கூட்டம்

கோத்தகிரி : கோத்தகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை கூட்டம் நடந்தது. இதில்,கோத்தகிரி வட்டார அளவில் அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளை இயக்கத்தில் சேர்ப்பது; இம்மாத இறுதிக்குள் நடப்பாண்டின் உறுப்பினர் சேர்கையை முடிக்கவேண்டும்; மேலும், ஆறாவது ஊதியக்குழுவின் ஒரு நபர் குழு பரிந்துரை மூலம் கிடைக்கும் பண பலன்களை விரைவில் பெற்றுத்தர உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வட்டார பொருளாளர் பீட்டர் வரவேற்றார். வட்டார தலைவர் ஆலம்மாள் தலைமை வகித்தார். இயக்க மாநில பிரதிநிதி சபி அகமது, மாவட்ட தலைவர் நஞ்சன், வசந்தகுமாரி, யசோதாமகேஷ்வரி மற்றும் ராஜேந்திரன், மிளிதேன் பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ