உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் பேச்சு போட்டி

பள்ளியில் பேச்சு போட்டி

ஊட்டி : ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ஊட்டி கிரவுன் லயன்ஸ் கிளப் சார்பில் 64வது சுதந்திர தின விழா பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக கிரவுன் லயன்ஸ் கிளப் தலைவர் துரை கண்ணன், செயலர் நாகமணி, பள்ளி மூத்த ஆசிரியர் சாமுவேல் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படுகிறது. மணிகண்டன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். தமிழாசிரியர் சிவசங்கரன், வளர்மதி, மல்லிகா, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., அலுவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ