உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில கால்பந்து அணிக்கு மாணவர்கள் தேர்வு

மாநில கால்பந்து அணிக்கு மாணவர்கள் தேர்வு

ஊட்டி : தமிழக கால்பந்து அணிக்கு ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பாக, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடந்த தமிழக கால்பந்து அணிக்கான முதற்கட்ட தேர்வில், கோவை, நீலகிரி , ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியை சார்ந்த பிளஸ் 2 மாணவர்கள் கோபகுமார், அப்துல் ரஷீத் ஆகிய 2 மாணவர்கள் தமிழக கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊட்டி அரசு மேல் நிலை பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. அதில், ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் மூர்த்தி, பி.டி.ஏ., தலைவர் சந்திரன், பொருளா ளர் சதாசிவம், கிராம கல்விக்குழு தலைவர் விஸ்வநாத், மூத்த ஆசிரியர்கள் சாமுவேல் பிரபாகர், ருக்மணி, மணிகண்டன், உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன், ஆசிரியர் சிவக்குமார், எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் மற்றும் பலர் பாராட்டினர். என்.எஸ்.எஸ்., அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை