உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏலக்காய் விலை வீழ்ச்சி

ஏலக்காய் விலை வீழ்ச்சி

பந்தலூர் : ஏலக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறி விவசாயம் மட்டுமின்றி, காபி, ஏலம், இஞ்சி, மஞ்சள் உட்பட விளை பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை பயன் தரும் ஏலக்காய் விவசாயம், பந்தலூரில் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. 4 கிலோ பசுங்காயை உலர வைத்தால், ஒரு கிலோ ஏலக்காய் கிடைக்கிறது. இதை உள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள், நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு கிலோவுக்கு 1,600 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது 600 ரூபாய் மட்டுமே கிடைப்பதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை