மேலும் செய்திகள்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரக்கன்று வினியோகம்
27-Nov-2024
ஊட்டி; சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஊட்டி 'போப் மெர்சி ஹோம்' மாற்றுத் திறனாளிகள் முகாமில், த.வெ.க., சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.,) குன்னுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சார்பில், ஊட்டி 'போப் மெர்சி ஹோம்' மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.பேரட்டியை சேர்ந்த விவேக் ஆனந்த் தலைமையில், குன்னுார் நிர்வாகிகள் தாஸ், வக்கீல்கள் சரவணகுமார், அற்புதமணி மற்றும் செந்தில், சூர்யா விஜய், பிரின்ஸ், தேவா, டேனியல், உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Nov-2024