உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு வன அதிகாரிகள் மீது அதிருப்தி

கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு வன அதிகாரிகள் மீது அதிருப்தி

கூடலுார்: முதுமலை மசினகுடியில் கிராம சபை கூட்டத்தில், வன அதிகாரி பங்கேற்காததை கண்டித்து மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.முதுமலை, மசினகுடி ஊராட்சி கிராம சபை கூட்டம் மாயார் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி செயலாளர் கிரண் வரவேற்றார். கூட்டத்துக்கு, ஊராட்சி துணை தலைவர் நாகேஷ் தலைமை வகித்தார்.கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில், வனத்துறை தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை எழுப்பினர்.அப்போது, பதில் கூற வேண்டிய மசினகுடி வனகோட்ட துணை இயக்குனர், கூட்டத்தில் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அதிகாரிகளின் சமாதானத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் கிராம சபை கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்