அயோத்தி ராமர் கோவில் அட்சதை 150 வீடுகளுக்கு வினியோகம்
குன்னுார்;குன்னுார் ஆரஞ்ச் குரோவ் பகுதியில் நேற்று, 150 வீடுகளில், ராமர் கோவில் அட்சதை வழங்கப்பட்டது.அயோத்தி ராமர் கோவிலில் வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி அயோத்தியில் இருந்து பூஜிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்ட அட்சதைகளுடன் மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.குன்னுார் ஆரஞ்ச் குரோவ் பகுதியில், 150 வீடுகளில், ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பாப்பண்ணன், பிரபு ஆகியோர் இவற்றை வழங்கினர்.