உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்ட கால்பந்து போட்டி நாளை துவக்கம்

மாவட்ட கால்பந்து போட்டி நாளை துவக்கம்

ஊட்டி ; ஊட்டியில் நடக்கும் சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டி நாளை துவங்குகிறது.நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 2024---25ம் ஆண்டுக்கான, 'கோவை டெக் பர்ஸ்ட் டிவிஷன் சாம்பியன் ஷிப்' கால்பந்து போட்டி நாளை துவங்கி, ஏப்., 20ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும், 10 அணிகளுக்கான கேப்டன் அறிமுக நிகழ்ச்சி, எச்.ஏ.டி.பி., திறந்த மைதானத்தில் நடந்தது. போட்டியில் பங்கும் பெரும், 10 அணிகளில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, தமிழ்நாடு கால்பந்து சங்கம் நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும்.இப்போட்டி ஒவ்வொரு வார இறுதியில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோத்தகிரி காந்தி மைதானம் மற்றும் ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மணி, செயலாளர் மோகன் முரளி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை