உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தினமலர் செய்தி எதிரொலி: ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்தில் குடிநீர் வசதி

தினமலர் செய்தி எதிரொலி: ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்தில் குடிநீர் வசதி

பந்தலுார்: பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்தில் குடிநீர் வந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பந்தலுார் அருகே பன்னிக்கொல்லி பழங்குடியின கிராமத்தில், 18 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள் சிதிலமடைந்த நிலையில், மாற்று குடியிருப்பு ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து இவர்களுக்கு ஏலமன்னா சாலையோரம், இடம் ஒதுக்கி தரப்பட்டு குடியிருப்புகள் கட்டி தரப்பட்டது. ஆனால், இவர்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலையில், கடந்த ஆறு மாதங்களாக சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள், மின்வாரியத்தினர் நேரில் ஆய்வு செய்தனர். கலெக்டர் உத்தரவுபடி கிராமத்தை ஒட்டி ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு கடந்த, 19 ம்தேதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லியாளம் நகராட்சி சார்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் பொருத்தி, குடிநீர் வினியோகம் செய்து தரப்பட்டது. இதனால், குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த, பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ