உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுார் நடந்த மாரத்தான் போட்டி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுார் நடந்த மாரத்தான் போட்டி

குன்னுார்; குன்னுார் உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாவட்ட அளவிலான போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. அதில், ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்தோர் என பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியை சாய் அறக்கட்டளை மாதா ஜி யசோதா, சுவாமி மேகநாத் சாய், அருவங்காடு இன்ஸ்பெக்டர் உதயராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில், மேகநாத் சாய் பேசுகையில்,''நீலகிரியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார். இன்ஸ்பெக்டர் உதயராஜ் பேசுகையில்,''பெற்றோர், குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பது அவசியம். விளையாட்டு போட்டிகளில் சிறுவர்கள் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்,'' என்றார். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சாய் நிவாஸ் நிர்வாகி அருண், 'ஐவி டூ' அகாடமி நிறுவனர் சுந்தரமூர்த்தி, 'ஹாக்கி யூனிட் ஆப்' நீலகிரி அமைப்பு துணை தலைவர் சுரேஷ்குமார், தேசிய நடுவர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர். ஹாக்கிஅமைப்பின் பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை