குடிபோதையில் தொழிலாளிக்கு கத்தி குத்து; ஒருவர் கைது
குன்னுார்; குன்னுாரில் குடிபோதையில், கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.குன்னுார் கன்னி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராஜ், 56, மணிகண்டன், 47. கூலி தொழிலாளர்களான இவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை சாலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மணிகண்டனின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில், தங்கராஜ் கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த மணிகண்டனுக்கு, குன்னுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னுார் போலீசார், வழக்கு பதிவு செய்து, தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.