உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அணைகளில் தண்ணீர் இல்லாததால் மின்... உற்பத்தி நிறுத்தம்!கோடை மழை வராததால் வாரியம் திணறல்

அணைகளில் தண்ணீர் இல்லாததால் மின்... உற்பத்தி நிறுத்தம்!கோடை மழை வராததால் வாரியம் திணறல்

ஊட்டி:நீலகிரியில் கோடை மழை பொய்த்ததால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார் ஆகிய, 13 அணைகள் உள்ளன. அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

833.65 மெகாவாட் உற்பத்தி திறன்

அதில், 'குந்தா வட்டத்தில், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுக் குப்பை,' என, 6 மின்நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில், 'முக்கூர்த்தி நுண் புனல் மின் நிலையம், பைக்காரா நுண்புனல் மின்நிலையம், சிங்காரா மின்நிலையம், மாயார், மரவகண்டி நுண் புனல் நிலையம், பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில், மொத்தமுள்ள, 12 மின்நிலையங்கள் மூலம், நள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

ஏமாற்றி வரும் மழை

கடந்தாண்டில் பருவ மழை பொய்த்தது. அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக குறைந்து தண்ணீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்றது, நடப்பாண்டிலும், எதிர்பார்த்த அளவுக்கு கோடை மழை பெய்யவில்லை. 184 அடி கொண்ட எமரால்டு அணை தண்ணீர் மட்டம் சரிந்துள்ளது. அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் சரிந்துள்ளது. இதனால், காட்டுகுப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், முக்கூர்த்தி நுண் புனல் மின் நிலையம், ஆகிய மின்நிலையங்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் நிலையங்கள் மூலம், தினசரி, 150 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'இங்குள்ள, 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ள பயன்படும், அணைகளில் முழு அளவில் தண்ணீர் இருந்தால், நள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.ஆனால், கடந்தாண்டில் பருவமழை பொய்த்தது. அணைகளில் உள்ள இருந்த தண்ணீரில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதால், இருப்பு அடியோடு குறைந்தது. நடப்பாண்டில் அனைவரும் எதிர்பாத்த கோடை மழையும் இதுவரை பெய்யவில்லை. சில இடங்களில் மட்டும் குறைவாக பெய்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அடுத்தடுத்து மின்நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து காத்துள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ