உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதால் மக்கள் ஆத்திரம் பிரபல ஓட்டலுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதால் மக்கள் ஆத்திரம் பிரபல ஓட்டலுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

ஊட்டி,; ஊட்டியில் உள்ள பிரபல ஓட்டலின் கழிவுநீரை சாலையில் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சி, 28வது வார்டு பர்ன்ஹில் பகுதியில் உள்ள 'ஸ்டெர்லிங் ரிசார்ட்' ஓட்டலில் இருந்து நேற்று சாலையில் கழிவுநீர் திறந்து விடப்பட்டது. இதனால், அந்த வழியாக துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது அப்பகுதி பொதுமக்கள் கழிவு நீரை சாலையில் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, அந்த தனியார் ஓட்டலுக்கு, 50, 000 ரூபாய் அபராதம் விதித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே இந்த ஓட்டல் நிர்வாகம் பலமுறை இதுபோல் கழிவு நீரை திறந்த வெளியில் திறந்து விட்டுள்ளது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு இப்பகுதியில் வசிக்க முடியவில்லை, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஊட்டியில் சில ஓட்டல்கள் இதே முறையில் கழிவு நீரை சாலைகள் திறந்து விடுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அனைத்து ஓட்டல்களிலும் கழிவுநீர் இணைப்பு முறையாக உள்ளதா என நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !