உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி

ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி

கூடலுார்; கூடலுார்- ஊட்டி சாலைக்கு இ-பாஸ் சோதனை மையம் மாற்றப்பட்டதால், கேரளா -கர்நாடக பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கோடை சீசனை தொடர்ந்து,கடந்த, 1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களை மட்டும் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட எல்லையில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் நடைமுறைப்படுத்தினர். இந்நிலையில், கூடலுாரை ஒட்டிய, கேரளா- தமிழக எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர் உள்ளிட்ட எட்டு இடங்களிலும், தமிழக-கர்நாடக எலலையான கக்கனல்லா பகுதிகளில் இ--பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வந்தது.இதனால், கேரளா, கர்நாடகா இடையே பயணிக்கும் பயணிகளும் இ--பாஸ் எடுத்து பயணம் மேற்கொண்டனர். சோதனை சாவடிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிரமத்தை தவிர்க்க, சோதனை மையத்தை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்ற வலியுறுத்தி வந்தனர்.தொடர்ந்து, மாவட்ட நிர்வாக உத்தரவுபடி, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டு இ--பாஸ் சோதனை பணிகள் நிறுத்தப்பட்டு, நேற்று முதல் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மேல் கூடலுார் சில்வர் கிளவுட் சோதனை சாவடி அருகே,சோதனை மையம் செயல்பட துவங்கியுள்ளது. இதனால், 11 சோதனை சாவடிகள் நான்காக குறைந்துள்ளன. 'கூடலுார் வழியாக ஊட்டி செல்பவர்களை தவிர்த்து, பிற பகுதிக்கு செல்லும் வெளி மாநில பயணிகளுக்கு இ--பாஸ் தேவையில்லை. வழக்கம்போல் பயணிக்கலாம்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கூடலுார் வழியாக கேரளா, - கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மாநில எல்லைகளில் வாகன நெரிசல் குறைந்து, வாகனங்கள் வழக்கம் போல சென்று வர துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ