உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

கோத்தகிரி : கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் காரி, புஷ்பா, மாணவர்கள் ஸ்ரீ சூர்யா, சஞ்சாய்கா, சினோரா ஆகியோர் காமராஜரின் வாழ்கை வரலாறு மற்றும் கல்விக்காக அவர் ஆற்றி தொண்டு குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி துணை முதல்வர் கங்காதரன் வரவேற்றார். முதல்வர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். முதுநிலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் 'காம ராஜரும் கல்வித் தொண்டும்' என்ற தலைப்பில் பேசினார். மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியை பிரேமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி