உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் விதிமுறைகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் சீல்

தேர்தல் விதிமுறைகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் சீல்

குன்னுார்;தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், குன்னுாரில் எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் உள்ளாட்சி தலைவர் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அரசு துறையினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, எம்.பி., எம்.எல்.ஏ., அலுவலகங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அறைகளை 'சீல்' வைத்து சாவிகளை தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, குன்னுாரில் துணை தாசில்தார் பாபு, வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன், உதவியாளர் மஜீத் ஆகியோர் ஆய்வு செய்து, குன்னுார் எம்.எல்.ஏ.. அலுவலகம், நகராட்சி தலைவர் அறை, ஊராட்சி ஒன்றிய தலைவர் அறைகளுக்கு சீல் வைத்தனர்.இதே போல, உலிக்கல், அதிகரட்டி, பேரூராட்சி, எடப்பள்ளி, பேரட்டி, உபதலை, வண்டிச்சோலை, பர்லியார் ஊராட்சி தலைவர் அறைகள் அந்தந்த பகுதி வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை