| ADDED : பிப் 22, 2024 06:18 AM
பந்தலுார்: பந்தலுார் கிராமத்தில் பாதையின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பந்தலுார் அருகே, கூவமூலா பகுதியில் இருந்து, செட்டிவயல் மற்றும் அத்திக்குன்னா பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. சாலை ஒற்றையடி நடைபாதையாக இருந்த நிலையில், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சிமென்ட் சாலையாக மாற்றி சீரமைத்தது.இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத வகையில் சாலையில் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல், பணி நடந்துள்ளது.மக்கள் கூறுகையில், 'இதனால், சாலை அமைத்தும் பயனில்லை. இந்த சாலையில் மூன்று இடங்களில் வாகனங்கள் செல்ல தடை ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயனில்லை,' என்றனர். எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை, சாலை ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.