| ADDED : ஜன 18, 2024 01:58 AM
கூடலுார் : 'கூடலுார்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை தவிர்க்க, சாலையோர மின் கம்பங்களை மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தியுற்றனர்.கூடலுார்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம், மார்த்தோமா நகர் பகுதிகளில், சாலையோரம் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க, தடுப்பு சுவர் அமைத்து சாலையை அகலப்படுத்தி உள்ளனர். சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள, மரங்களை அகற்றி, மின்கம்பங்கள் மாற்ற மக்கள் வலியுறுத்தினர்.இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. இதனால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யன்கொல்லி அருகே, சாலையோர மின் கம்பத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில், மின்சாரம் தாக்கி, அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்தார்.இதே போன்ற விபத்துக்கள், மைசூரு சாலை மரப்பாலம் பகுதியில், சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள மின் கம்பங்களால் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.டிரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரத்தில் உள்ள, மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.